- 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பழைய வாகனங்களின் புதுப்பித்தல் கட்டணம் உயர்வு...இலகு ரக வாகனங்களுக்கு 5 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாகவும், இருசக்கர வாகனங்களுக்கு, ஆயிரத்தில் இருந்து 2 ஆயிரமாகவும் அதிகரிப்பு...
- பீகாரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் யாத்திரையில், வரும் 27-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு...
- ஊழல் செய்தால் பிரதமராகவே இருந்தாலும் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு...ஊழல் செய்தவர்கள் ஆட்சியில் இருக்கலாமா? என பொன்முடி, செந்தில் பாலாஜி பெயர்களை குறிப்பிட்டு கேள்வி...
- ஒரு நாளும் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகப்போவதில்லை என நெல்லை பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு...
- சிறையில் இருந்தும் பதவியில் இருக்கும் அணுகுமுறை தொடர்ந்தால், ஊழலை எப்படி எதிர்த்து போராட முடியும்? என பிரதமர் மோடி கேள்வி...ஒரு அரசு ஊழியர் 50 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டால், தானாகவே அவர் வேலையை இழக்கிறார் எனவும் பேச்சு...
- மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
- சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு...
- வங்கக்கடலில் வரும் 25ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என, இந்திய வானிலை மையம் அறிவிப்பு...
- மதுரவாயல், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், பொன்னேரி, உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை...
- சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கும் இடையே, மழையின் காரணமாக அறுந்த மின் ஒயர்...
- சென்னையின் 13 இடங்களில் மிக கனமழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்...
- சென்னையில், நுங்கம்பாக்கம், தி.நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு பெய்த கனமழை...