நிபா' கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து வெளியே வந்த இளைஞர் | அடித்து இழுத்து சென்ற கேரள போலீசார்
நிபா கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து வெளியேற முயன்ற இளைஞர் கைது
கேரளாவில் நிபா கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து வெளியேற முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாட்டு விதிகள் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,
மண்ணார்க்காட்டில் உள்ள நிபா கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து ஃபாரூக் என்பவர், வெளியேற முயற்சி செய்துள்ளார். இதனை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதையடுத்து கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து அத்துமீறி வெளியேற முயன்ற இளைஞர் ஃபாரூக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.