Yawning | Viral Video | கொட்டாவி விட்டதால் லாக்கான வாய் - மூட முடியாமல் தவித்த இளைஞர்
கொட்டாவி விட்டதால் வாயை மூட முடியாமல் தவித்த இளைஞர் கேரளாவில், இளைஞர் ஒருவர் கொட்டாவி விட்டதால் வாயை மூட முடியாமல் தவித்த வீடியோ காட்சி, சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.பாலக்காடு ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த ரயில் பயணி ஒருவர், கொட்டாவி விட்ட பின்பு வாயை மூட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த ரயில்வே கோட்ட மருத்துவ அலுவலர், உடனடியாக சிகிச்சை மேற்கொண்ட நிலையில், இளைஞர் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.