``எங்க மாநிலத்துல எங்க மொழி பேச மாட்டீயா?’’ - ஹோட்டல் ஓனருக்கு அடி

Update: 2025-07-02 09:13 GMT

மராத்தியில் பேசாத உணவக உரிமையாளரை மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தொண்டர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களாகவே இந்தி- மராத்தி மொழி பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில் மும்பையை அடுத்த மீரா சாலைப் பகுதியில் உள்ள வடமாநிலத்தவருக்கு சொந்தமான உணவகத்திற்கு வந்த நவ நிர்மாண் தொண்டர்கள், உணவக உரிமையாளரை மராத்தியில் பேசச்சொல்லி வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவருக்கு மராத்தி தெரியாது எனக் கூறப்படும் நிலையில் இந்தியில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள், அந்த நபரை தகாத வார்த்தைகளால் வசைபாடியதோடு சரமாரியாக கன்னத்தில் அறைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்