அத்வானியை கொல்ல முயன்றவர்கள் இவர்களா? - விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2025-07-02 03:14 GMT

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்த வழக்குகளில் கடந்த 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த இரண்டு பயங்கரவாதிகளை தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அபூபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி என்பது தெரிய வந்தது. இதில் கைது செய்யப்பட்ட அபூபக்கர் சித்திக், கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் துணை பிரதமர் எல்.கே அத்வானி மதுரையில் ரத யாத்திரை சென்றபோது, வெடிகுண்டு வைத்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் பல்வேறு மொழிகளை பேசுவதில் சிறந்தவர்கள் என்பதால் பல மாநிலங்களுக்கு சென்று தலைமறைவாக இருந்து வந்ததும் பெயர்கள் மற்றும் அடையாளங்களை மாற்றிக்கொண்டு சுற்றி திரிந்ததால் இவர்களை கைது செய்வதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்