மத்திய பிரதேசத்தில் காவல் நிலையம் போல் பந்தல் வடிவமைத்து, காவலர் போல் விநாயகரை சித்தரித்துள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில், விநாயகர் பக்தர் ஒருவர், காவல் நிலையம் போல் கூடாரம் அமைத்து, விநாயகரை டிஜிபி போல் சித்தரித்து, அவரிடம் மக்கள் தங்கள் கோரிக்கைகளை வைப்பது போல் அமைத்துள்ளார். செய்தியாளரிடம் பேசுகையில், மனிதர்களை அனைத்து பிரச்னைகளிலிருந்து காக்கும் கடவுளான விநாயகரை டிஜிபி போல் செய்துள்ளது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.