UttarPradesh | `அந்த' நடையை பார்த்து வந்த சந்தேகம்.. புர்காவை கழட்ட சொன்ன மக்களுக்கு ஷாக்
உத்தர பிரதேச மாநிலம் தியோரியாவை அடுத்த கெளரி பஸார் பகுதியில் காதலியை சந்திக்க புர்கா அணிந்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், புர்காவை கழற்றுமாறு அறிவுறுத்தினர். அப்போதுதான் அவர் ஆண் என்பதும் அவரது பெயர் முகமது சுஹேல் என்பதும் தெரியவந்தது. மேலும் தனது காதலியை சந்திக்க அங்கு வந்ததாக சுஹேல் தெரிவித்தாா். இதையடுத்து அவரை போலீசாரிடம் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர்.