Uttar Pradesh | டேஸ்டான சாப்பாடு கேட்டு ஸ்பூன், டூத் பிரஷ்களை சாப்பிட்ட இளைஞர்
புலந்த்ஷாஹரை சேர்ந்தவர் 35 வயதான சச்சின். போதைப்பழக்கத்துக்கு அடிமையான இவரு, மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தாரு. அப்போ திடீர்னு, திடீர் வயிற்று வலியால துடிச்சதால, மருத்துவமனைக்கு கூட்டி போய், ஸ்கேன் செஞ்சி பாத்தாங்க. அப்போ வயிறு ஃபுல்லா இரும்பு பொருட்களா இருக்கறத பாத்து டாக்டர்கள் அதிர்ச்சி ஆகிட்டாங்க. உடனே ஆபரேஷன் செஞ்சி பாத்தப்போ 28 ஸ்பூன்கள், 19 டூத் பிரஷ்கள், 2 பேனா என 49 பொருட்கள எடுத்திருக்காங்க... மறுவாழ்வு மையத்துல கொடுத்த சாப்பாடு சுவையா இல்லைன்னு, கோபத்துல இப்படி செஞ்சதா சச்சின் சொல்லி ஷாக் கொடுத்துருக்காரு.