ஒன்றுக்கொன்று பின்னிக்கொண்டு சுற்றிய 2 பைக்குகள்.. ஹைதராபாத்தில் ஏற்பட்ட விசித்திர விபத்து
விபத்தில் சிக்கி வீதியில் சுழன்ற பைக்குகள்
விசித்திர விபத்து. ஒன்றாக சுழன்ற பைக்குகளை 15 நிமிட நேரம் பிரிக்க இயலாமல் தவித்த பொதுமக்கள்.
ஹைதராபாத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
இளைஞர்கள் இரண்டு பேர் வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் வந்த நிலையில் அவை இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது..
விபத்தில் இரண்டு இளைஞர்களும் காயம் இன்றி தப்பினர்.
ஆனால் சாலையில் இன்ஜின் ஆப் ஆகாமல் விழுந்த இரண்டு மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று இனைந்து சுமார் 15 நிமிட நேரம் சாலையில் சுழன்றன. இதனை பார்த்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆகியோர் ஆச்சரியம் அடைந்த நிலையில் சுமார் 15 நிமிட நேரம் போராடி அந்த மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் இரண்டு பேரும் அவற்றை நிறுத்தி மீட்டனர்.
இந்த விசித்திர விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது