சிங்கிள் பேமன்ட்..’ அனைத்து டோல்கேட்டிலும் இனி இலவசம்...- மத்திய அமைச்சர் முக்கிய தகவல்..

Update: 2025-02-06 08:33 GMT

ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி, நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் இலவசமாக கடக்கும் வகையில் புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக, மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையிலும், கூட்டநெரிசலை தவிர்க்கவும் புதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார். இத்திட்டத்தில், வாழ்நாள் கட்டணமாக, 15 ஆண்டுகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், அந்த காலகட்டத்திற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். இ​த்திட்டம் அமலுக்கு வந்தால் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்பெறுவார்கள் என்றும் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்