``உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவற்றை சுட்டு கொல்லலாம்’’ - கேரள அரசு திடீர் அனுமதி
கேரளாவில் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விலங்குகளை சுட்டுக் கொல்ல அனுமதியளிக்கும் அவசர சட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையொட்டி வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். அவசர சட்டம் அமலுக்கு வந்தால் மாவட்ட ஆட்சியர் அல்லது தலைமை வன அதிகாரியின் உத்தரவின்பேரில், வனவிலங்குகளை சுட்டுக் கொல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.