Karate Medal Theft | இத கூட திருட ஆரம்பிச்சுட்டாங்க.. பதக்கம் வாங்கிய வீரர்களுக்கு பேரதிர்ச்சி

Update: 2025-11-22 02:30 GMT

மத்தியப்பிரதேசத்தில் தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மாணவர்களின், பதக்கங்கள், அடங்கிய பையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவாலியர் நகரில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், திருச்சி பெல் வளாக சி.பி.எஸ்.இ பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அவர்கள், அந்தியோதயா ரயிலில் தமிழகம் திரும்பிக் கொண்டிருந்த போது, பதக்கம் மற்றும் துணிகள் திருடப்பட்டதாக ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவெறும்பூர் ரயில்நிலையத்தில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்