உடலை வில்லாய் வளைத்து யோகாவில் கின்னஸ் சாதனை படைத்த சிறுமி

Update: 2025-06-21 07:36 GMT

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுமி, தனது உடலை வில்லாய் வளைத்து யோகாசனங்களை செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியைச் சேர்ந்த சிறுமி ருத்வி, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசனங்களை செய்தார். காண்போரை மெய்சிலிர்க்கும் வகையில் யோகாசனம் செய்த சிறுமி, ஒரு நிமிடத்தில் 10 ஆசனங்களைச் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். யோகா செய்யும்போது மனம் நிம்மதியாக இருப்பதாகவும், படிப்பில் அதிக கவனம் செலுத்த முடிவதாகவும் சிறுமி ருத்வி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்