"வக்பு சட்டம் அரசியல் ரீதியாகவே எதிர்க்கப்படுகிறது" - வக்பு கூட்டுக்குழு தலைவர் ஜக்தாம்பிகா பால்

Update: 2025-04-19 04:09 GMT

வக்பு சட்டம் அரசியல் ரீதியாகவே எதிர்க்கப்படுவதாக, வக்பு கூட்டுக்குழு தலைவர் ஜக்தம்பிகா பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வக்பு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வக்பு வாரியம் ஒரு மத அமைப்பு அல்ல..அது வக்பிற்கு சொந்தமான நிலத்தை மட்டுமே கவனித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

குழுவின் அறிக்கை அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்லது மத சுதந்திரத்தில் தலையிடுவதாக இருந்தால், தான் ராஜினாமா செய்யத் தயார் என்றும் ஜக்தம்பிகா பால் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்