சைடிஷுக்காக ஏற்பட்ட ஆத்திரம்.. காத்திருந்து குத்தி குடலை உருவிய கொடூரன்

Update: 2025-07-21 16:53 GMT

சைடிஷ் பிரச்சினை - பார் ஊழியர் கொலை

கேரள மாநிலம் திருச்சூரில் சைடிஷ் பிரச்சினையில் பார் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரில், அழகப்பன் நகரை சேர்ந்த ஷிஜோ என்பவர் மது குடிக்க சென்றுள்ளார். அங்கு, சைடிஷ் அதிகமாக கேட்டதால் பார் ஊழியர்களுக்கும், ஷிஜோவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், பாரில் இருந்து வெளியேறிய ஷிஜோ, பார் மூடும் வரை காத்திருந்து, பாரிலிருந்து அனைவரும் வெளியேறிய பின் கதவை மூடச் சென்ற ஊழியரான ஹேமச்சந்திரனை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார் ஷிஜோவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்