மாணவர் பையில் இருந்த அந்த `பொருள்’ - போலீசே அதிர மாணவன் கொடுத்த வாக்குமூலம்
பள்ளி மாணவர் பையில் மதுபாட்டில்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பள்ளி மாணவர் பையிலிருந்து மதுபாட்டில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவனந்தபுரம் மாவட்டம் நந்தியோடு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. அப்போது ஒரு மாணவரின் பையில் மதுபானம் இருந்ததை ஆசிரியர்கள் கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். விசாரணையில், தங்களுக்கு வாக்களிக்கும் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.