ரிக்சாவில் இருந்து இறங்கிய மூதாட்டி... சாவகாசமாக வந்து கொள்ளையர்கள் செய்த செயல்
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டார்-53 பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் மூதாட்டியிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். ஈ- ரிக்சாவில் வந்த மூதாட்டி ஒருவர் ரிக்சாவில் இருந்து இறங்கும்போது அவருக்கு அருகே மிகவும் சாவகாசமாக இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு பேர், மூதாட்டியின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.