நாட்டையே உலுக்கிய விவகாரம்... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Supreme Court
ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்த கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்புடைய குறைகளை பாதிக்கப்பட்டோர் வழக்கை கண்காணித்து வரும் கேரள உயர்நீதிமன்றத்திடமே தெரிவிக்கலாம் என்றும் கேரள உயர் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்புக்கு கூறியது.