sudhamurthy | இன்போசிஸ் நாராயண மூர்த்தி மனைவி சுதா மூர்த்திக்கு நேர்ந்த பேரதிர்ச்சி சம்பவம்

Update: 2025-09-23 07:01 GMT

பெங்களூரில், மாநிலங்களவை எம்.பி.யும், எழுத்தாளருமான சுதா மூர்த்தியின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 5-ஆம் தேதி, தொலைத்தொடர்பு அலுவலர் எனக் கூறி, சுதா மூர்த்தியின் செல்போனில் பேசிய ஒருவர், தொலைபேசி எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். அதன் பிறகு தனது செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் வருவதாக சுதா மூர்த்தி, பெங்களூரு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்