மாணவியின் உயிர் போகும் நிலை.. Meta கொடுத்த அலர்ட் - உயிரை காத்த திரில் நிமிடங்கள்
உத்தர பிரதேசத்துல தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி, மெட்டா நிறுவனத்தின் எச்சரிக்கையால காப்பாற்றப்பட்டிருக்காங்க... அது எப்படி, என்ன நடந்ததுனு விரிவா பாக்கலாம்....
காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற 20 வயது கல்லூரி மாணவியை மெட்டா நிறுவனத்தின் எச்சரிக்கையால் துரிதமாக செயல்பட்டு போலீசார் காப்பாற்றினர். உத்தர பிரதேசம் மாநிலம் பரேலியை சேர்ந்த கல்லூரி மாணவி, இளைஞர் ஒருவரை இன்ஸ்டாகிராமில் காதலித்து வந்தார். இந்த நிலையில், அந்த இளைஞர் தொடர்பைத் துண்டித்ததால் பூச்சிக் கொல்லி மருந்தையும், தற்கொலை குறிப்பையும் அந்த மாணவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்துக்கு மெட்டா நிறுவனம் அலர்ட் செய்ததன்பேரில் போலீசார் 16 நிமிடத்தில் சென்று, பூச்சி மருந்து குடித்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.