செருப்பில் இருந்து தலையை தூக்கி காலில் கொத்திய பாம்பு - துடிதுடித்து பலியான IT ஊழியர்
பெங்களூருவைச் சேர்ந்த 41 வயது சாஃப்ட்வேர் இஞ்சினியரின் காலணிக்குள் ஒளிந்திருந்த பாம்பு கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மஞ்சு பிரகாஷ் என்ற அந்த இளைஞர் காலணியில் பதுங்கி இருந்த பாம்பு கடித்தபோது அவருக்கு உணர்வு தெரியவில்லை. ஏனெனில், ஒரு விபத்தில் காலில் உணர்வு இழப்பு ஏற்பட்டதால் அவரால் பாம்புக் கடியை உணர இயலவில்லை. இறுதியில் அவர் வாயில் நுரைதள்ளியபடி படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்... இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.