சாம்சங் Z Fold 7 மொபைல் என நம்பி Unboxing செய்தவருக்கு பேரதிர்ச்சி..
ஆர்டர் போட்டது செல்போன் - பார்சலில் வந்தது டைல்ஸ்
பெங்களூருவில், ஆன்லைனில் சாம்சங் போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் டைல்ஸ் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் நிறுவன ஊழியர் பிரேமானந்த், அமேசானில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாம்சங் Z Fold 7 மொபைலை ஆர்டர் செய்துள்ளார். குறிப்பிட்ட தேதியில் டெலிவரியானதை Unboxing செய்த போது, பெட்டிக்குள் மொபைல் போனின் எடைக்கு நிகரான டைல்ஸ் கல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். முழு பணமும் முன்கூட்டியே செலுத்தியிருந்த பிரேமானந்த், NCRP போர்டல் வழியாக புகார் அளித்துள்ளார்.