Sabarimalai Viral Video | பதினெட்டாம் படியேறி ஐயப்பனை தரிசித்த 6 மாத பெண் குழந்தை - தந்தை நெகிழ்ச்சி
ஐயப்பன் தரிசனம் -18ம் படி ஏறிய 6 மாத பெண் குழந்தை - தந்தை நெகிழ்ச்சி
தனது தந்தையை அரவணைத்தபடி பதினெட்டாம் படி ஏறும் 6 மாத பெண் குழந்தையின் வீடியோ வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த அஜய், சபரிமலை ஐயப்பனை தனது மகளுடன் தரிசனம் செய்ய வேண்டும் என்ற வேண்டுதலை வைத்துள்ளார். இதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தனது ஆறு மாத பெண் குழந்தை இஷா பார்வதியுடன் வந்து தரிசனம் செய்து, வேண்டுதல் நிறைவேறியதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.