நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு, அண்மையில் நியமிக்கப்பட்ட 4 நியமன எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹரிஷ்வரதன் ஸ்ரீங்களா, வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின், கேரளாவை சேர்ந்த சதானந்தன் மாஸ்டர் மற்றும் மூத்த வழக்கறிஞர் உஜ்ஜுவல் நிகம் ஆகியோர், மாநிலங்களவை நியமன எம்பிக்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர், பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.