டிரைவர்கள் இனி 'இளநீர்' குடிக்க கூடாது.. வந்த புது ரூல்ஸ்

Update: 2025-02-21 02:38 GMT

ரயில் இன்ஜின் டிரைவர்கள் பணியின் போது இளநீர் உள்ளிட்ட பொருட்களை சாப்பிடக் கூடாது என்று தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'பணிக்கு வரும் போதும், பணி முடிந்து போகும் போதும், ரயில் இன்ஜின் டிரைவர்கள், இளநீர், பழங்கள், இருமல் மருந்துகள், குளிர் பானங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில் இன்ஜின் டிரைவர்களிடம் ஆல்கஹால் பரிசோதனை செய்யும் கருவியின் மூலம் சோதனை செய்யும் போது, அவர்களின் உடலில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது. இதனால் இளநீர் குடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்