Putin| Rahulgandhi | இந்தியா வரும் புதின் - ராகுல் சொன்ன கருத்தால் தேசிய அரசியலில் பரபரப்பு
வெளிநாட்டில் இருந்து வரும் தலைவர்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தான் சந்திப்பதை பாஜக அரசு விரும்பவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்... அரசுமுறை பயணமாக ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ராகுல், பொதுவாக இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர்களை சந்திப்பது வழக்கம்...வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் அரசாங்கத்தில் இதுதான் நடந்தது . ஆனால் இப்போது அப்படி இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் தான் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம், எதிர்கட்சித் தலைவரை சந்திக்க வேண்டாம் என்று தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த மக்கள் கூறுவதாகவும் அவர் பரபரப்பு கருத்தை தெரிவித்தார்.