Pune Accident | இரண்டு லாரிகளுக்கு நடுவே சிக்கி சிதைந்த கார் - உடல் நசுங்கி பலியான 8 பேர்
புனேவின் நவாலே பாலத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில், 8 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
நவாலே பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி ஒன்று அடுத்தடுத்து பல வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு லாரிகளுக்கு நடுவே கார் ஒன்று நசுங்கிய நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு கனரக வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், விபத்து தொடர்பாக விசாரணையானது நடைபெற்று வருகிறது."