இரு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார். நந்தம்பாக்கத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கிய பின், மறுநாள் திருச்சி புறப்பட்டு, ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்து மாலை 5.45 மணிக்கு டெல்லிக்கு புறப்படுகிறார்.