கர்ப்பிணியை விரட்டியடித்த PHC.. ம.பி.யில் அரங்கேறிய அவலம்

Update: 2025-03-30 02:58 GMT

மத்திய பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டத்தில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போது, அங்கிருந்த செவிலியர்கள் டெலிவரிக்கு அனுமதிக்க மறுத்ததால் குழந்தை இறந்து பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெலிவரிக்கு இன்னும் நேரம் இருப்பதாக கூறி செவிலியர்கள் அவர்களை திருப்பி அனுப்பிய நிலையில், சைலான் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா க்வாலா, நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்ட தனது மனைவியை தள்ளுவண்டியில் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் தள்ளு வண்டியிலேயே குழந்தையின் கால்கள் வெளிவந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவருக்கு குழந்தை இறந்து பிறந்தது. இந்த சம்பவம் தொடர்பாக செவிலியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்