PM Modi | Kerala | பிரதமர் மோடி கேரளா வருகை.. இன்று முதல் தொடங்கும் புதிய சேவை
3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை இன்று தொடங்கி வைக்கும் பிரதமர்
பிரதமர் மோடி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நாகர்கோவிலில் இருந்து மங்களூரு, திருவனந்தபுரத்தில் இருந்து தாம்பரம், திருவனந்தபுரத்தில் இருந்து சாரல் பள்ளி இடையேயான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் திருச்சூர்-குருவாயூர் இடையிலான புதிய பயணிகள் ரயில் என 4 ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும், தெருவோர வியாபாரிகளுக்கான பிஎம் ஸ்வநிதி வட்டி இல்லா கடன் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு கடன்களை
வழங்க உள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார்.