PM Modi | "இளைஞர்களுக்கு கொட்ட போகும் வேலை வாய்ப்பு" - மத்திய அரசு அறிவிப்பு
"தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் வேலைவாய்ப்பு பெருகும்"இந்தியா, இங்கிலாந்து இடையே கையொப்பமான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மரை மும்பையில் பிரதமர் மோடி வரவேற்றார்.பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா, இங்கிலாந்து இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இறக்குமதி செலவு குறைவதோடு,ஏற்றுமதி அதிகரித்து இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாவதாக கூறினார்.உக்ரைன் மற்றும் காசா பிரச்சினையில் அமைதியை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிப்பதாகவும்,இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் வளாகங்களைத் திறப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய பிரதமர் மோடி,அந்நாட்டின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில், குருகிராம் வளாகம் சமீபத்தில் திறக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.