PM Modi | 20 அடியில் பிரதமரின் பிரம்மாண்ட உருவம் - World Record படைத்த மாணவர்கள்

Update: 2025-09-11 07:46 GMT

பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாள் வரும் 17ம் தேதி கொண்டாடப்படவுள்ளதையொட்டி, அவரது பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியில் உள்ள தனியார் பள்ளியில் 20 அடியில் பிரதமரின் உருவப்படத்தை 3 மணி நேரத்தில் 75 மாணவர்கள் ஒன்றிணைந்து தரையில் வரைந்து அசத்தினர். இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத நெல், வைக்கோல், மரத்தூள், தென்னை கழிவுகளை பயன்படுத்தி உருவப்படம் வரைந்து உருவப்படத்தை சுற்றி நின்றவாறு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பள்ளி மாணவர்களின் இந்த முயற்சியை தி கிங்டம் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்