சர்வதேச பயங்கரவாதியாக அறியப்படும் மசூத் அசாருக்கு, பாகிஸ்தான் அரசு 14 கோடி ரூபாயை நிவாரணமாக வழங்க உள்ளது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவருக்கு ஒரு கோடி வீதம், 14 பேருக்கான நிவாரணமாக மசூத் அசாருக்கு 14 கோடி ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.