காஷ்மீர் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள சில இடங்களில், பாகிஸ்தான் ராணுவம் 2வது நாளாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சிறிய அளவில் இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடைபெற்றதாகவும், இதில் இந்திய வீரர்கள் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.