சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள டெம்ரி கிராமத்தில், லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், லாரியில் இருந்த கோழிகளை பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச்சென்றனர். இறைச்சிக்காக கோழிகளை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்தது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் விபத்து நடந்த இடத்தில் சிதறிக்கிடந்த கோழிகளை பிடித்துச்சென்றனர்.