``இனி சைவ உணவுகள் மட்டுமே’’ - சிக்கனுக்கு பெயர்போன KFC-ன் திடீர் அறிவிப்பு
சைவமாக மாறிய பிரபல KFC நிறுவனம்
உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்தில் இந்து அமைப்பினர் செய்த ரகளையால், சைவ உணவுகளை மட்டுமே விற்பதாக KFC நிறுவனம் கூறியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள பிரபல KFC கடையில், இந்து ரக்ஷா தள் என்ற இந்து அமைப்பினர் சாவன் மாதத்தில் அசைவ உணவுகளை விற்கக் கூடாது என கூறி கடையின் ஷட்டரை இழுத்து மூடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட KFC நிறுவன கிளையில் சைவ உணவுகளை மட்டுமே வழங்குவதாக வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அசைவ உணவுகளுக்கு மட்டுமே பெயர் பெற்ற KFC நிறுவனம் சைவமாக மாறி இருப்பது பேசு பொருளாகியுள்ளது.