`ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து விமர்சனம்..மேடையில் ஓபன்-ஆக போட்டுடைத்த கபில் சிபில்

Update: 2025-01-18 13:30 GMT

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில், அடிப்படையிலேயே குறைபாடு இருப்பதாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக சட்டத்துறை மாநாட்டில் இதுகுறித்து பேசிய அவர், ஒரு அரசு நம்பிக்கையை இழந்துவிட்டால் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம், கூட்டாட்சி கட்டமைப்பை சிதைத்துவிடும் என சாடிய கபில் சிபில், இந்தியா என்பது ஒன்றியங்களின் அரசு என்று தான் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்