பிஜேடி தலைவராக நவீன் பட்நாயக் 9-வது முறையாக போட்டியின்றி தேர்வு
பிஜூ ஜனதா தளத்தின் தலைவராக நவீன் பட்நாயக் 9-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக், கடந்த 1997 -ம் ஆண்டு கட்சித் தொடங்கப்பட்டதில் இருந்து அக்கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். கடந்த 2020 பிப்ரவரியில் 8 முறையாக கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நவீன் பட்நாயக், தற்போது மீண்டும் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மார்ச் 5, 2000 முதல் ஜூன் 12, 2024 வரை 24 ஆண்டுகள் தொடர்ந்து ஒடிசாவின் முதல்வராக நவீன் பட்நாயக் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.