இந்திய மார்க்கெட்டில் கால் பதித்தார் மஸ்க் -மும்பையில் ஆரம்பமான சகாப்தம்
மும்பையில் தனது முதல் ஷோரூமைத் திறந்த டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் மின்சார வாகன விற்பனையை தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மேக்கர் மேக்சிட்டி மாலில் மாதம் 36 லட்சம் ரூபாய் வாடகையில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் ஷோரூமைத் திறந்துள்ளது . டெஸ்லா கார்கள், ஆட்டோ பைலட் தொழில்நுட்பம் குறித்து வாடிக்கையாளர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமை, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெஸ்லா இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவு செய்யும்போது மகாராஷ்டிரா விருப்பமான இடமாக இருக்கும் என கூறினார்.