8 அரசு அதிகாரிகளின் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்.. அள்ள அள்ள ரூ.37 கோடி..
8 அதிகாரிகளின் வீடுகளில் சோதனை...ரூ.37 கோடி சொத்துக்கள் பறிமுதல்
கர்நாடகாவில் 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 37 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு, கோப்பல், தாவனகெரே உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் ஒரு அதிகாரியின் வீட்டிலிருந்து மட்டும் கட்டுக்கட்டாக 52 லட்சம் ரொக்கம் சிக்கியது. பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரது வீட்டில் இருந்து சுமார் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எட்டு அதிகாரிகள் மீதும் லோக் ஆயுக்தா போலீசார் சட்டவிரோத சொத்துகளை சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.