மதுபோதையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய நபர் கைது
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குன்னங்குளம் பகுதியில் மதுபோதையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். சின்னராசு என்ற நபர், ஆட்டோவில் வந்ததற்கு பணம் தர மறுத்து ஆட்டோ ஓட்டுநர் ஷாஜகான் என்பவரை மதுபோதையில் தாக்கி உள்ளார். இதில் ஆட்டோ ஓட்டுநரின் மண்டை உடைந்த நிலையில் சின்னராசுவை கைது செய்து குன்னங்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.