Mamata Banerjee | PM Modi | Amitshah | "அமித் ஷாவை நம்பாதீர்கள்.." - பிரதமர் மோடியை எச்சரித்த மம்தா
நாட்டின் செயல் பிரதமரைப் போல அமித் ஷா நடந்து கொள்வதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்காளர் பட்டியல் திருத்தம், வெள்ள நிவாரணப் புறக்கணிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை கடுமையாக சாடினார். பிரதமரைப் போல அமித் ஷா நடந்து கொள்வதாகவும், அவரிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மம்தா தெரிவித்தார்.