சொன்னதை செய்து காட்டிய அமைச்சர்
மும்பை டெஸ்லா ஷோரூமில் இருந்து முதல் காரை வாங்கிய அமைச்சர்
மகாராஷ்டிரா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக், மும்பையில் உள்ள டெஸ்லா ஷோரூமில் இருந்து முதல் டெஸ்லா காரை வாங்கியுள்ளார். ஜூலை 15-ஆம் தேதி இந்த ஷோரூம் திறக்கப்பட்டபோது, டெஸ்லா காரை வாங்குவதாக அமைச்சர் பிரதாப் தெரிவித்திருந்தார். முதல் டெஸ்லா காரை பெற்றுக் கொண்ட பின், மின்சார வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர் பிரதாப், டெஸ்லா காரை எந்தவித சலுகையும் இல்லாமல் முழுத் தொகையையும் செலுத்தி வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.