திருப்பதி திருமலையில் அன்னமய்யா பவன் கூட்ட அரங்கம் அருகே சிறுத்தை புலி ஒன்று வந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னமய்யா பவன் கூட்ட அரங்க சுவரில் சிறிது நேரம் அமர்ந்திருந்த புலி, பிறகு அமைதியாக அங்கிருந்து சென்றது.
தகவல் அறிந்த வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பக்தர்கள் எச்சரிக்கையுடன் நடமாட வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.