`லாலேட்டன் சோ ஸ்வீட்..' - பலாப்பழத்தில் மோகன்லாலின் ஓவியம் - அசத்தல் காட்சி
நடிகர் மோகன்லாலின் பிறந்த நாளை ஒட்டி, பலாப்பழத்தால் அவரது ஓவியம் தீட்டிய கேரள ஓவியர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். திருச்சூரைச் சேர்ந்த டாவின்சி சுரேஷ் என்ற பிரபல ஓவியர் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட வர்கீஸ் தரகன் என்பவரது பலாப்பழ தோட்டத்தில் பலாப்பழ,ம் அதன் விதை, பலாப்பழ தோல் மற்றும் பலாப்பழத்தின் பல பாகங்களை பயன்படுத்தி நடிகர் மோகன்லாலின் முகத்தை உருவாக்கியுள்ளார். சுமார் 5 மணி நேரம் செலவிட்டு உருவாக்கிய இந்த கலை படைப்பை காண்பதற்கு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டனர்.