அலுவலகத்தில் கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி
தமது புகார் குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கூலி தொழிலாளி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரியபெருமாள் கரடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சந்தோஷ்குமார், அதே பகுதியில் வசித்து வரும் கோவிந்தராஜ் என்பவர் தனது உறவினரோடு சேர்ந்து தமது குடும்பத்தை தகாத வார்த்தையால் திட்டி, தாக்க முயன்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு சந்தோஷ் குமார் தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை தடுத்த போலீசார், தண்ணீரை ஊற்றி அவரை மீட்டனர்.