மும்பை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது
மும்பை விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவேன் என தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மஞ்சித் கௌதம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த மிரட்டலால் விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்ட நிலையில், சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டெடுக்கப்படாததால் இது வதந்தி என்பது தெரிய வந்தது.
மிரட்டல் அழைப்பு குறித்து வழக்கு பதிவு செய்து, மிரட்டல் விடுத்தவரை தேடிவந்த காவல்துறையினர், மஞ்சித் கௌதம் என்ற இளைஞரைகைது செய்து விசாரித்து வருகின்றனர்..