Kerala | கேஸ் சிலிண்டர் மேல் அமர்ந்து விளையாடிய குழந்தைக்கு நேர்ந்த கதி - பதறவைக்கும் வீடியோ

Update: 2025-10-03 04:28 GMT

கேரளாவில், கேஸ் சிலிண்டர் மேல் அமர்ந்து விளையாடியபோது கம்பிக்குள் கால் சிக்கி வெளியேற முடியாமல் தவித்த குழந்தையை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.கண்ணூர் மாவட்டம் ஒட்டப்பிளாவு பகுதியை சேர்ந்த குழந்தை, வீட்டின் சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டரின் மேல் ஏறி அமர்ந்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் கால்கள், கம்பி இடுக்கில் சிக்கி வெளியேற முடியாமல் கதறி அழுதது. இதையடுத்து, கட்டிங் மிஷின் மூலம் கம்பியை துண்டித்து குழந்தையை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்