ரஞ்சி டிராபி SEMI FINAL-அ ஒரு ரன் லீட் எடுத்த கேரளா டீம் அதனாலேயே, வரலாற்றுல முதன்முறையா பைனலுக்கு போய் அசத்தியிருக்கு....
முதல் இன்னிங்ஸ்ல கேரளா 457 ரன் எடுக்க, அடுத்து ஆடுன குஜராத் 9 விக்கெட்டுக்கு 455 ரன் எடுத்திருந்தது.
3 ரன் அடிச்சி லீட் எடுத்தா குஜராத் பைனல் போகும்... ஒரு விக்கெட் எடுத்தா கேரளா பைனல்க்கு போகும் என்ற நிலைமைல மேட்ச் சும்மா திக் திக் திக்நு போச்சு...
அப்ப, ஒரே ஷாட்ல மேட்ச முடிச்சிடால்ம் னு குஜராத் பேட்டர் லெக் சைட்ல ஷாட் ஓங்கி அடிக்க, பந்து ஷார்ட் லெக் ஃபீல்டர் ஹெல்மெட்ல பட்டு காத்துல பறந்துச்சு...
அப்புறம் என்ன, அதை ஸ்லிப் ஃபீல்டரு லாவகமா கேட்ச் பிடிக்க, வரலாற்றுல முதன்முறையா கேரளா ரஞ்சி டிராபி பைனல போயிடுச்சிங்க...