சிறையில் தொழிலதிபருக்கு சிறப்புச் சலுகை- டிஐஜி சஸ்பெண்ட்

Update: 2025-01-23 06:28 GMT

               சிறையில் தொழிலதிபருக்கு சிறப்புச் சலுகை- டிஐஜி சஸ்பெண்ட்

கேரளாவில் நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான தொழிலதிபருக்கு சிறையில் சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் சிறைத்துறை டி.ஐ.ஜி. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொழிலதிபர் பாபி செம்மனூர், சிறையில் இருந்தபோது, முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, சிறைத்துறை டிஐஜி அஜய் குமார், காக்கநாடு சிறை கண்காணிப்பாளர் ராஜு ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்